3d-3புதிய இதழ் – 2024-02
1. வாசகர்களே!
2. கற்பாறை நிலம்
3. முள்ளுள்ள இடங்கள்
4. நல்ல நிலம்

3d-2இதழ் – 2024-01
1. வாசகர்களே!
2. 30ம் வருடத்தை எட்டுகிறது திருமறைத்தீபம்
3. புத்தகக் கண்காட்சியும், அறியப்படாத கிறிஸ்தவமும்
4. தயாரித்துப் பிரசங்கம் செய்தல்
5. வழியருகே விழுந்த விதை
6. ஆவிக்குரிய போதகனா? அடக்கியாளும் ஆகாபா?
7. தோமா கிறிஸ்தவம் – கருத்துரை

3d-2இதழ் – 2023-04
1. வாசகர்களே!
2. நுழைவோம் வாருங்கள் கிறிஸ்தவ இலக்கியச் சோலை
3. தகவல் சேகரிப்பு – கற்றறிதல் – எதிர்வினைகள்
4. ஜோன் பனியனின் மோட்சப் பிரயாணத்தில் கிறிஸ்தியானின் மனமாற்றம்
5. பாவம் பொல்லாதது – வாசிப்பனுபவம்

cover-3d1இதழ் – 2023-03
1. வாசகர்களே!
2. பவுலின் சுவிசேஷம்
3. சிந்தித்துப் படிக்கவேண்டிய வேதம்
4. உண்மையாய்ச் சிந்தி, உண்மையைப் பேசு, உண்மையாய் நட
5. அமாநுஷ்ய விளக்கமளிக்கும் அர்த்தமற்ற செயல்
6. ரேனியஸ் ஐயரின் நாட்குறிப்பு
7. வசனத்தின் மெய்யான அர்த்தத்தைக் கண்டறிதல்

Kingslyகசப்பான உண்மை ! – கருத்துரை – கிங்ஸ்லி
தங்களுடைய திருமறை தீபம்  வலைத் தளத்தில் சமீபத்தில் தாங்கள் எழுதியிருக்கும் “ சலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும்” என்ற ஆக்கத்தை வாசித்தேன்.  இது ஆத்மீக  பாரத்தை ஏற்படுத்துவதாகவும் ஏமாறும் ஆத்துமாக்கள் எப்போது விழித்துக்கொள்ளும் என்ற  ஆதங்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் இருக்கிறது. உண்மையை உ(றை)ரக்கச்சொல்லும்போது அது “பாகற்காயைப் போல” கசப்பாகத்தான் இருக்கும். அது கசப்பு என்றாலும் அதிலுள்ள நன்மைகள் அதிகம். அதுபோல இவ்வாக்கத்தில் நீங்கள் விளக்கியிருக்கும் உண்மைகளும் கூட பலருக்கு கசப்பாக இருக்கலாம். ஆனால் வாசித்து சிந்தித்து மெய்க்கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்பவர்களுக்கு  சந்தோஷத்தைத் தரும் உற்சாக பானம் மட்டுமல்லாது எச்சரித்து சுழற்றி விழிக்கச்செய்யும் சாட்டையும் கூட. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

Shebaசலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும் – கருத்துரை – ஷேபா மிக்கேள் ஜோர்ஜ்
வாசிக்கும் இதயங்களை அவற்றைக் குறித்து அசைபோடவைத்து, வெறுமனே நன்றி சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் தொடர்ந்து பேச வைக்கும் அருமையான கட்டுரை இது.

கட்டுரையின் தலைப்பை வாசித்தபோது இதயம் சிறிதாக துணுக்குற்றாலும், அதில் காணப்படும் நிஜம் உள்ளத்தை சுட்டது உண்மை.  திருமறை தீபம் இதழ் தொகுப்பு (volumes) நூல்களைத் தொடர்ந்து வாசித்துப் பார்த்தால் வாசிப்பு, உரையாடல், சிந்தனை தொடர்பாக 20-பதுக்கும் அதிகமான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.  எனவே இந்த வாசிப்பின்மை “வைரஸ்” குறித்து கர்த்தர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தும், இன்னமும் இந்த விஷயத்தில் சரியான முயற்சிகள் செய்யாதவர்களாகவும், சோம்பேரிகளாகவுமே இருக்கிறோம் என்பதை மேடை போட்டுக் காட்டுகிறது இந்த கட்டுரை. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

logicalசலிப்பூட்டும் சம்பாஷனையும், பிதற்றல் பிரசங்கங்களும்
தர்க்கத்தைப் பற்றியும், தர்க்கரீதியான சம்பாஷனையைப் பற்றியும், தர்க்கரீதியில் பிரசங்கம் செய்வதைப்பற்றியும் இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நம்மவர்களின் சம்பாஷனைகளிலும், பிரசங்கத்திலும் இன்று இவற்றைக் காணமுடியவில்லை. அதாவது, சிந்தனைபூர்வமான, அறிவார்ந்த சம்பாஷனைகளில் நம்மவர்கள் ஈடுபடுவதில்லை; அத்தகையோர் மிகக்குறைவு. உண்மையில் அப்படிப்பட்ட ஒரு சிலரையே நான் சந்தித்திருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். சலிப்பூட்டும் சம்பாஷனைகளுக்கும், பிதற்றல் பிரசங்கங்களுக்கும் மத்தியில் நம்மவர்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

WATSON-Thomas_detailமனந்திரும்புதல்: தவறைச் சரிசெய்தலும் (Restitution), அதற்கு ஈடு செய்தலும் (Reparation)
‘நம்முடைய இறையியல் தவறாக இருந்தால் நாம் விசுவாசிக்கும் அத்தனையும் தவறானவையாகிவிடும்’ என்று ஓர் இறையியலறிஞர் சொன்னதாக வாசித்திருக்கிறேன். அது உண்மைதான். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பின்பற்றுகிற எந்த விசுவாசத்திற்குரிய விஷயத்திற்கும் வேதத்தில் இருந்து பதிலளிக்க முடியும். வேதம் அத்தகைய பதிலை அளிக்காவிட்டால் அவர்கள் செய்துவரும் செயல் தப்பானது என்று நிச்சயம் முடிவெடுக்கலாம். அதனால் வேத இறையியல் நமக்குத் துல்லியமாகத் தெரிந்திருப்பது அவசியம். அதில் தவறிருந்தால் நம் விசுவாசமும், நம் செயல்களும் தவறானவையாகிவிடும். வேதம் மட்டுமே தவறில்லாதது; அது மட்டுமே நம் விசுவாசத்திற்கான அடித்தளமாயிருக்கிறது. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

russiaகழுகின் பிடியில் உக்கிரேன்
கோவிட் பிரச்சனையை ஓரளவுக்குத் தாங்கிச் சுமந்து அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கை விதை முளைத்துத் துளிர்விட ஆரம்பித்திருக்கும் வேளையில், எதிர்பாராதவிதமாக ரஷ்யா உக்ரேனைச் சுற்றிவளைத்துப் போர்தொடுத்து அதன் அரசைக் கவிழ்க்கும் தன்னிச்சையான அராஜகச் செயலைச் செய்திருக்கிறது. ரஷ்யா இந்தளவுக்குப் போகும் என்பதை எவரும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. குண்டு மழை பொழிந்து ஆயிரக்கணக்கில் மக்கள் உக்ரேனில் மடிந்து கொண்டிருக்கிறார்கள்; பல்லாயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாகியிருக்கிறார்கள். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

Shebaசிக்கல் தீர்க்க வந்திருக்கும் ‘மனித சித்தம்’
மனித சித்தம்: கருத்துரை
ஷேபா மிக்கேள் ஜார்ஜ் (மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து)

“சிக்கல் எது என்று அறிந்தாலே, பாதி சிக்கல் தீர்ந்துவிடும்” என்பது பழமொழி. அது போல, ஆர்மீனிய, பெலேஜியனிச, செமி- பெலேஜியனிச போதனைகளின் பிடியில் சிக்கி மெய்யான கிறிஸ்தவ வாழ்வு வாழமுடியாமல் தவிக்கும் தற்கால கிறிஸ்தவர்களுக்கும், சரியான முறையில் சித்தத்தைக் குறிவைத்து சுவிசேஷ பிரசங்கம் செய்யத் தடுமாறும் போதகர்களுக்கும் ‘சிக்கல் எது’ என்பதை விளக்கும் இறையியல் போதனைகளை உள்ளடக்கியது, போதகர் பாலா அவர்களின் “மனித சித்தம்” எனும் நூல். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

arul nesanதேவ கோபம், (ஆசிரியர் R. பாலா) – வாசிப்பனுபவம்
அனைத்துக் கிருஸ்தவர்களும் வாசிக்க வேண்டிய அவசியமான நூலிது. ஒருவேளை தற்போது உங்களிடம் இப்புத்தகம் இருக்குமானால் உடனே பக்கம் எண் 123 ஐ வாசியுங்கள். இந்தப் பக்கத்தில் ஜொனத்தன் எட்வர்ட்ஸ் அவர்களின் பிரசங்கத்தின் ஒருபகுதி தமிழில் கொடுக்கப்பட்டிருக்கிறது. நிச்சியம் இந்தச் சிறிய வாசிப்பு முழுப் புத்தகத்ததையும் வாசிக்க உங்களை உந்தித் தள்ளும் என நம்புகிறேன். [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

திருமறைத்தீபம் (இதழ் 4, 2021) – வாசிப்பனுபவம்
போலிப்போதனைகளுக்கு விலகி நில்லுங்கள் என்ற தலைப்பின் கீழ் வந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, எனக்குள் நெடுங்காலமாக இருந்த ஒரு கேள்விக்கும் விடை கிடைத்தது, கிரியைவாதம் மற்றும் நியாயப்பிரமாண நிராகரிப்புவாதம் என்பவற்றின் இடையே உள்ள வேறுபாடு என்ன என்பது தான் அந்தக் கேள்வி. [மேலும் வாசிக்க இங்கே அழுத்தவும்]

 

Bala-2போதகர் ஆர். பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து நகரில், சவரின் கிறேஸ் சபையில் (ஆங்கிலம்) கடந்த 34 வருடங்களாகப் போதகராகப் பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் பணியாற்றி வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார்; கருத்தாழமிக்க ஆக்கபூர்வமான ஆவிக்குரிய ஆக்கங்களையும் அடிக்கடி இத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் தொடர்ந்து காணொளி மற்றும் ஒலிநாடாக்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.